எண்ணாயிரம் - சோழர்களின் OXFORD
ஒரு வழியாக காலையில் பார்க்க வேண்டிய வரலாற்றுத் தடங்கள் அனைத்தும் பார்த்தாகி விட்டது.இனி மதிய உணவினை பிரதான சாலைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அடுத்த வரலாற்றுத் தடங்களை மாலைக் காணலாம், எனப் புறப்பட்டோம். வந்தவழியே மறுபடியும் திரும்பாமல் எண்ணாயிரம் வழியாகச் செல்ல நினைத்தோம்.அதன்படியே வாகனத்தை மெதுவாக செலுத்த வழியெங்கும் வயல்வெளிகளை நோட்டமிட்டவாறு சென்றுகொண்டிருக்க ஒரு வீட்டிற்கு முன்பாக ஒரு கூடை நிறைய கொய்(த)யா கனிகள் நிரம்ப வைத்துவிட்டு ஆள் யாரும் இல்லாதபடி இருந்தது.அநேகமாக இது விற்பனைக்குத் தான் என்று வாகனத்தை நிறுத்தி ஒலியெழுப்ப வீட்டினுள் இருந்து ஒரு நபர் வந்து கொய்யா வேண்டுமா என்றார்.ஆம் என்றவுடன் எடையிட்டு கொடுக்க இப்போது சாப்பிட மட்டும் காய்களை நெடுக்குவாட்டில் நறுக்கி காரம் உப்பு சேர்க்க எங்களின் நாவில் நீர் பெருக சட்டென மூவரும் பிரித்து உண்ண அத்துணை சுவையாக இருக்குமென நாங்கள் நினைக்கவில்லை. பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை போலும் என்றெண்ணிக்கொண்டே அங்கிருந்து, கொய்த கனிகளை சுவைத்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம். சுமார் 15 நிமிட பயணத்தில் எண்ணாய...