Posts

Showing posts from May, 2026

எண்ணாயிரம் மலை

Image
   கல்வெட்டுகள் தொடர்பான எனது தேடலில் விழுப்புரம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சமணத் தடயங்கள் அதிகளவில் இருந்தாலும் அவற்றுள் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணாயிரம் மலையே இன்றைய (22/05/2026) பயணம்.  செஞ்சி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டம்பட்டினை அடுத்து இடதுபுறமாக  6 கி.மீ சென்றால் இம்மலையினைக் காணலாம். குன்னத்தூர்  மற்றும் எண்ணாயிரம் எனும்  ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது  இந்த எண்ணாயிரம் மலை. உள்ளூர் மக்கள் இதனை  மேல்கூடலூர் மலை, ஐவர் மலை, பஞ்சபாண்டவர் மலை, திருநந்தகிரி மலை என பல பெயர்களில்  அழைக்கிறார்கள். கத்தரி வெயில் காரணமாக இன்று காலை 9 மணியளவிலேயே  பயணத்தை தொடங்க இதமான காலை வெயில் மூர்க்கமாகும் முன்னமே அடையவேண்டிய தடத்தினை அடைந்துவிட்டேன்.  எவ்வித மெனக்கெடலும் இன்றி தூரத்தில் இருந்து பார்க்கும்போதே மலையில் படிக்கட்டுகள் வண்ணம் தீட்டப்பட்டு இதுதான் நீ வர வேண்டிய வழி வேறெங்கும் தேடி அலைய வேண்டாம். என வழிகாட்ட வாகனத்தை ஒரு வேப்பமர நிழலில் இளைப்பாறவிட்டு  300 மீட்டர்...

சங்ககால கோவில்-சமணர் கற்படுகைகள் கொண்ட சிவகிரி மலை

Image
                            சிவகிரி மலை  பழைமை வாய்ந்த சமணர் படுக்கைகள் மற்றும் குகைகளைக் கொண்டுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலை என்பதைக் கேள்விப்பட்டு அப்படி என்னதான் இருக்கிறது பார்த்துவிடும் ஆவலில் எனது தேடல் தொடங்கியது.சூரியன் சுட்டெரிக்கும் வெயிலில் காலை 10 மணியளவில் புலிவந்தி எனும் ஊருக்குக் கிளம்பினேன்.கிளம்பும் போதே மனைவி மதிய உணவிற்கு வந்து விடுவீர்களா? என்று கேள்வி எழுப்பியபோதே எனக்கு அளிக்கப்பட்ட நேரம் மொத்தமாக மூன்று மணி நேரம் மட்டுமே எனப் புரிந்துகொண்டேன்.எனது ஊரிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்திருப்பதால் இருசக்கர வாகனத்தில் ஒரு மணிநேரம் பயணிக்க  சரியாக 11.00 மணியளவில்  விழுப்புரம் மாவட்டம்   செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள புலிவந்தி கிராமத்திற்கு அருகில் மலையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, வனப்பகுதியாகப் பாதுகாக்கப்பட்டு வரும் அமைதியான மற்றும் இயற்கையான சூழலைக் கொண்ட சிவகிரி மலையை அடைந்தேன்.வழக்கம் போலவே இந்த மலையும் வனப்பகுதிக்குள் அமைந்திருந்தாலும்...

சமணர் படுகை - தளவானூர்

Image
              சமணர் படுகை - தளவானூர்    கூகுள் வரைபடத்தில் அக்குறிப்பிட்ட இடம் நான் நிற்கும் இந்த தளவானூர் குடைவரைக் கோவிலிலிருந்து சில மீட்டர்கள் தூரமே காட்டியது. சரி வரைபடத்தில் நடந்து செல்லும் வழித்தடத்தினை தேர்வு செய்து நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு பத்து அடிகள் எடுத்து வைக்க முற்படும் போதெல்லாம் வலது பக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு என என்னைக் குழப்பியது. கிட்டத்தட்ட அந்த இடத்திற்கு அருகில் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. இருந்தும்  தடத்தினைக் கண்டுபிடிக்க இயலாமல் சற்றே குழம்பிப் போனேன். இனி கூகுள் வரைபடம் உதவாது என்று அதை அனைத்து விட்டு சுற்றும் முற்றும் கவனிக்க தொடங்கினேன்.   வயல்வெளிக்குச் செல்லும் ஓர் ஒற்றியடிப்பாதை கண்ணில் புலப்படவே அதை பின் தொடர்ந்தேன். அது என்னை வயல்வெளிக்கு மட்டுமே இட்டுச் சென்றது. மறுபடியும் துவங்கிய இடத்திற்கு வந்து நின்றேன். மீண்டும் உற்று நோக்கத் தொடங்கியதும் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் சிறு வெளிச்சம் கண்ணில் பட்டது சரி என்று அதைக் காண அருகில் நெருங்கினேன்....
Image
        சத்ருமல்லேசுவரம் (தளவானூர்) ஜெயம்கொண்டான் கோவில் முடித்து அங்கிருந்து பிரதான சாலை வழியாக செல்லாமல் ஜம்போதி மற்றும் திருவம்பட்டு வழியாக தளவானூர் செல்ல ஆயத்தமானேன். காலையில் தென்பட்ட மேகக்கூட்டம் தற்போது மேலும் கரு மேகமாய் திரண்டது. எதுவாகினும் தளவானூர் சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை கூட்டினேன். வழி நெடுகிலும் இருபுறமும் கற்பாறைகளை அடுக்கி வைத்தார் போல் ஆங்காங்கே குன்றுகள் தென்படத் துவங்கியது. சரியாக 11 கிலோமீட்டர் தொலைவில் நான் அடைய வேண்டிய ஊர் இருந்தது.    கூகுள் வரைபடத்தில் கோவிலை அடைய வழி கேட்டபோது அது வயல் வெளி வழியாகவே ஒற்றையடி பாதையில் செல்லுமாறு எனக்கு வழிகாட்டியது. சரி ஒரு கை பார்த்து விடுவோம் என்று வயலை ஒட்டிய ஒற்றையடி பாதையில் வாகனத்தை செலுத்தினேன். கோவிலை அடைய சுமார் 500 மீட்டர் தொலைவு இருக்கும் அதற்கு மேல் என்னால் வாகனத்தை செலுத்த முடியவில்லை. வயல்வெளி ஓரமாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு கால்நடையாக கோவிலை அடைந்தேன்.பொதுவாக இது போன்ற புராதன கோவில்களில் பெரும்பாலும் ஆள், அரவம் நடமாட்டம் இருக்காது என்று கேள...