எசாலம் எனும் எய்தார்
சோழா்களின் வரலாற்றுப் பொக்கிஷத்தை அறிய “தோற்றுவாயாய்” அமைந்த எசாலம் கிராமத்தின் நடுநாயகமாக எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக எழுந்தருளியுள்ள ஶ்ரீராமநாதேஸ்வரா் திருத்தலமே எங்களின் அடுத்த பார்வை. நேரம் சரியாக 11.50 இருக்கும் கோவில் நடை இன்னும் சாத்தப்படவில்லை என்ற மகிழ்ச்சியில் அவசர அவசரமாக வாகனத்தை மர நிழலில் அமர்த்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம். ஶ்ரீராமநாதேஸ்வரா் கருவறையில் லிங்கமூா்த்தியாக ஶ்ரீராமநாதேஸ்வரா் அருட்காட்சி தருகின்றாா். லிங்கத்தின் நெற்றியில் பிரம்ம சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன. கருவறையிலுள்ள தூங்காவிளக்கின் ஒளியில் அழகுறக் காட்சி தருகின்றாா் அருள்மிகு ஶ்ரீராமநாதேஸ்வரா். கண்களும் மனமும் முகிழ்க்க வணங்கி முடித்து அர்த்தமண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த சிலைகள் மற்றும் படக்காட்சிகளை கண்டுவிட்டு வெளியில் வர ப...