Posts

எண்ணாயிரம் - சோழர்களின் OXFORD

Image
 ஒரு வழியாக காலையில் பார்க்க வேண்டிய வரலாற்றுத் தடங்கள் அனைத்தும் பார்த்தாகி விட்டது.இனி மதிய உணவினை பிரதான சாலைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அடுத்த வரலாற்றுத் தடங்களை மாலைக் காணலாம், எனப் புறப்பட்டோம். வந்தவழியே மறுபடியும்  திரும்பாமல் எண்ணாயிரம் வழியாகச் செல்ல நினைத்தோம்.அதன்படியே வாகனத்தை மெதுவாக செலுத்த வழியெங்கும் வயல்வெளிகளை நோட்டமிட்டவாறு சென்றுகொண்டிருக்க ஒரு வீட்டிற்கு முன்பாக ஒரு கூடை நிறைய கொய்(த)யா கனிகள் நிரம்ப வைத்துவிட்டு ஆள் யாரும் இல்லாதபடி இருந்தது.அநேகமாக இது விற்பனைக்குத் தான் என்று வாகனத்தை நிறுத்தி ஒலியெழுப்ப வீட்டினுள் இருந்து ஒரு நபர் வந்து கொய்யா வேண்டுமா என்றார்.ஆம் என்றவுடன் எடையிட்டு கொடுக்க இப்போது சாப்பிட மட்டும் காய்களை நெடுக்குவாட்டில் நறுக்கி காரம் உப்பு சேர்க்க எங்களின் நாவில் நீர் பெருக சட்டென மூவரும் பிரித்து உண்ண அத்துணை சுவையாக இருக்குமென நாங்கள் நினைக்கவில்லை. பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை போலும் என்றெண்ணிக்கொண்டே அங்கிருந்து, கொய்த கனிகளை சுவைத்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்.  சுமார் 15 நிமிட பயணத்தில் எண்ணாய...

எசாலம் எனும் எய்தார்

Image
  சோழா்களின் வரலாற்றுப் பொக்கிஷத்தை அறிய “தோற்றுவாயாய்”  அமைந்த எசாலம்  கிராமத்தின் நடுநாயகமாக  எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக எழுந்தருளியுள்ள ஶ்ரீராமநாதேஸ்வரா் திருத்தலமே எங்களின் அடுத்த பார்வை. நேரம் சரியாக 11.50 இருக்கும் கோவில் நடை இன்னும் சாத்தப்படவில்லை என்ற மகிழ்ச்சியில் அவசர அவசரமாக வாகனத்தை மர நிழலில் அமர்த்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.                                     ஶ்ரீராமநாதேஸ்வரா்  கருவறையில் லிங்கமூா்த்தியாக ஶ்ரீராமநாதேஸ்வரா் அருட்காட்சி தருகின்றாா். லிங்கத்தின் நெற்றியில் பிரம்ம சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன. கருவறையிலுள்ள தூங்காவிளக்கின் ஒளியில் அழகுறக் காட்சி தருகின்றாா் அருள்மிகு ஶ்ரீராமநாதேஸ்வரா்.                       கண்களும் மனமும் முகிழ்க்க வணங்கி முடித்து அர்த்தமண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த சிலைகள் மற்றும் படக்காட்சிகளை கண்டுவிட்டு வெளியில் வர ப...
Image
  பிரம்மதேசம் - பாடலீஸ்வரர்   பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியேற நண்பகல்  ஆகிவிட்டதனால் பிள்ளைகளுக்கு ஒரு பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கிக் கொடுத்துவிட்டு கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் ஒன்றை நான் காலி செய்ய மீண்டும் புறப்பட்ட அதே இடமான பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.  ஊரின் நட்ட நடு நாயகமாக அமைந்திருந்த கோவில் வாயிற் கதவினை அடைந்து பிள்ளைகளை வாசலின் வலதுபுறம் அமைந்திருந்த வேப்பமர நிழலில் சற்று ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு கோவிலை ஒரு முழு சுற்று சுற்றிவிட்டு வர புறப்பட்டேன். எனது மகன் நானும் உடன் வருகிறேன் என்றவுடன் மகளை அங்கிருந்த அம்மையாரிடம் பேசிக்கொண்டு இருக்கும்படி சொல்லிவிட்டு இருவரும் கோவிலை வலம் வந்தோம்.  முதலில் முன்கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றோம்.கிழக்கு நோக்கிய கோபுரத்தின் பீடம் மட்டுமே எஞ்சியிருக்க அதுவும் சரியான பராமரிப்பு இல்லாமல் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளின் கால்நடைகளை கட்டி வைக்கும் இடமாகவே  மாற்றம் பெற்று இருந்தது.  கோபுரத்தைத் தொடர்ந்து மகாமண்டபமும் மேற்கூரை முழுவதும் சிதைக்கப்பட்டு தளம் போடாத வீ...

பிரம்மதேசம் - பிரம்மபுரீஸ்வரர்.

Image
    பல்லவர்களை காண சுமார் 50 கிமீ சென்ற எங்களை மண்டகப்பட்டில் இருந்து 5 கி.மீ தொலைவிலேயே சோழர்கள் வரவேற்கத் தயாராக இருந்தார்கள். இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாடலீஸ்வரர் ஆலயம் ஊரின் நடுவிலும், பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் ஊரின் வடக்குப் பகுதியில் ஏரிக்கரையின் அருகேயும் அமைந்திருக்கின்றன.  முதலில் ஊரின் நடுவிலுள்ள கோவிலுக்கு சென்றோம். அங்கு கோவிலில் மீட்டெடுப்பு பணிகள் நடைபெறுவதால் வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கோவிலைப் பராமரிப்பவர்களுள் அம்மையார் ஒருவர்  ஏரிக்கரையின் அருகே அமைந்துள்ள கோவிலுக்கு முதலில் சென்று வாருங்கள், அங்கு ஐயர் இன்னும் கொஞ்ச நேரமே  இருப்பார் எனவும் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் மாலை வரை திறந்தே இருக்குமெனக் கூறினார்.      அவரிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து வந்த வழியே ஒரு 200 மீ சென்று ஏரிக்கரை செல்லும் வழியினை ஒரு பெட்டிக்கடையில் கேட்க அவர்கள் இந்தத் தெருவில் கடைசியாக சென்றால் நீங்கள் கேட்கும் கோவிலை அடையலாம் என்று கூற வாகனத்தில் வேகம் பிடிக்க சரியா...